பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




28

காலைத் தூக்கி வாலை உயர்த்திக்
கன்றுக் குட்டி துள்ளி ஓடும்;
பாலைக் குடிக்கும்; மடியை முட்டும்;
பாய்ந்து துள்ளி ஆடிக் களிக்கும்!1

தெருவில் ஓடிப் ‘பாரி’ அடிக்கும்,
சிறுவர் மடக்கத் தாண்டிக் குதிக்கும்;
அறுகம் புல்லை முனையிற் கடிக்கும்;
‘அம்மா’ என்று கத்தி அழைக்கும்! 2

கட்டிப் போட்டால் கதறிக் கிடக்கும்;
கட்டை அவிழ்த்தால் முட்டிக் குதிக்கும்;
கொட்டில், தோட்டம் சுற்றித் திரியும்;
குடிநீர்ப் பானை உருட்டிக் கவிழ்க்கும்! 3


குழந்தை இலக்கியம் ♦ 57