பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிளி - II
31

மூக்குச் சிவந்த பைங்கிளியே!
முக்கனி தாரேன்! வா! வா!வா!
பாக்கு வெற்றிலை மென்றாயோ?
பழந்தின் றலகு சிவந்தாயோ? 1

தென்னை மரந்தான் உன்வீடோ?
வீட்டுச் சிறுதொளை உன்வீடோ?
புன்னைக் காய்தான் உன்தலையோ?
பூக்காப் பருத்திக் காய்தலையோ? 2

வாழை மட்டை உன் ஊஞ்சல்
வாய்திறந் தால்ஏன் பெண்ஏசல்?
கூழையில் தென்னைப் பொந்திருந்தோ
குடிசெய் வதுதான் பெருவிருந்தோ? 3

‘அக்கா! அக்கா!’ என்றுன்னை
அடிக்கடி பேச யார்சொன்னார்?
செக்கச் சிவந்த மூக்குத்தான்
செடியிற் பழுத்த மிளகாயோ? 4


குழந்தை இலக்கியம் ♦ 65