இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெடித்த இலவங் காய்போலும்,
விளைந்த தாழைப் பூப்போலும்,
ஒடித்த வாழைப் பூப்போலும்
ஒக்க இருக்கும் புறாவெல்லாம்! 1
குன்றி மணியே இருகண்கள்!
கூர்வாய் காரைப் பெருமுட்கள்!
கன்றிய கோரைக் கிழங்கைப்போல்
காலின் விரல்கள்! விழிவிருந்தே! 2
அம்பைப் போல வான்கிளம்பி
அடிக்கடி பறக்கும் புறாக்கூட்டம்!
கம்பங் கொல்லை நெல்வயலைக்
கண்டால் இறங்கும் புறாக்கூட்டம்!3
ஆடும் பர்டும் ஒன்றிரண்டும்!
ஆடல் சுவைக்கும் பின்நின்றும்!
ஓடும் ஒன்று வால் தூக்கி!
தொடரும் ஒன்று தலைதூக்கி! 4
68 ♦ கவிஞர் வாணிதாசன்