பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33

'குக்குக்' கென்றே கூவுகின்றாய்!
குயிலே! எங்கே இசைகற்றாய்?
பக்க மேளம் இலையெனினும்
உன்றன் பாட்டுக் கீடுண்டோ? 1

காக்கைக் கூண்டிற் பிறந்தாயே!
காக்கை விட்டேன் பிரிந்தாயே?
சாக்குப் போக்குச் சொல்லாதே!
உண்மை சொல்லத் தயங்காதே! 2

கொஞ்சிப் பழமாம் உன்கண்கள்!
குறுங்கால் கோரைக் கிழங்குகளாம்!
நெஞ்சை அள்ளும் உன்குரலின்
நேர்மை, எங்கள் தமிழ்நேர்மை! 3


குழந்தை இலக்கியம் ♦ 71