இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ககவிஞர் வாணிதாசன் தமிழுலகுக்கு இப்போது புதுவதாகப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் வந்துள்ள பாடல்களைப் படித்து இன்புற்றேன். சிறு குழந்தைகளுக்கேற்ற பாடல்கள் சிலவும், வயதேறிய குழந்தைகளுக்கேற்ற பாடல்கள் சிலவும் இத்தொகுப்பிற் காணப்படுகின்றன.
கவிதைக்குப் பொருள் எதுவாகவும் இருக்கலாம். இதனைப் பற்றிப் பாடுவதால் கவி சிறப்புறும், இதனைப் பற்றிப் பாடுவதால் கவி சிறப்புறாது என்று கூறுதல் பொருந்தாது. எதனைப் பற்றிப் பாடினாலும், பாடிய முறையைப்பற்றி நோக்குவதுதான் பொருத்தம். அம்முறையில் இப்பாடல் தொகுப்பினை நோக்கினால், திரு. வாணிதாசனின் கவிதைத்திறம் நன்கு விளங்கும்.
நிலவினைப்பற்றிப் பலர் பாடியுள்ளார்கள். இந்தக் கவிஞர்,
”உலகிற் கல்லார் உன்னிடத்தில்,
ஒளவைக் கிழவி உண்டென்பார்;
நிலவே!அந்தக் கிழவிக்கு