பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34

கூரை ஏறி வீரன் போலக்
கொண்டைச் சேவல் கூவுது!-தீக்
கொண்டைச் சேவல் கூவுது!
ஊரை எழுப்பி விட்டுப் பின்னும்
யாரை எழுப்பக் கூவுது!-இன்னும்
யாரை எழுப்பக் கூவுது? 1

கூரை மீது நடைந டந்து
குனிந்து நிமிர்ந்து பார்க்குது!-செங்
கொண்டை குலுக்கி ஆர்க்குது!
போருக் கேகும் மறவன் போல
யாருக் காக நடக்குது?-சேவல்
யாருக் காக நடக்குது? 2

குப்பை சீய்த்துப் புழுவை உண்டு
குரல்கொ டுத்துக் கூவுது-வெண்கலக்
குரல்கொ டுத்துக் கூவுது!
எப்பக் கத்திற் சிப்பாய் வந்தான்?
ஏனோ இப்படிக் கூவுது ?-பின்
ஏனோ இப்படிக் கூவுது ? 3


குழந்தை இலக்கியம் ♦ 73