பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35

ன்றிரு மயிர்மு ளைத்த
சிறகினை உதறித் துள்ளிச்
சென்றிடும் தாயி னோடு;
சிறுகாலாற் குப்பை சீய்க்கும்;
பன்முறை கழுத்தைச் சாய்த்துப்
பார்த்திடும் உழுந்துக் கண்ணால்;
கொன்றிடும் எறும்பைக் கண்டால்
தென்னம்பூ மூக்காற் கொத்தி! 1

குடித்திடும் தேங்கி நிற்கும்
குட்டைநீர் தாயைப் போலே!
முடிவேந்தர் யானை யேறி
மூதூரைச் சுற்றல் போலத்
துடுதுடுப் பான குஞ்சு
பெட்டையின் தோள்மே லேறி
நடுத்தோட்டம், வேலி, குப்பை
நல்லுலா வாரா நிற்கும்! 2


குழந்தை இலக்கியம் ♦ 75