பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37

டியை ஊன்றி நடப்பார்;
தாடை ஒட்டிக் கிடப்பார்;
உடல் இளைத்து நரைத்தே
சொள் ஒழுகச் சிரிப்பார். 1

இருமிக் கொண்டே இருப்பார்
என்னை அம்மாள் அடித்தால்
அருகில் வந்து தடுப்பார்;
அணைத்து முத்தம் கொடுப்பர் 2

பாட்டுச் சொல்லிக் கொடுப்பார்;
பாடம் சொல்லிக் கொடுப்பார்
வீட்டில் என்றன் உள்ளம்
விரும்பும் நல்ல தாத்தா! 3


குழந்தை இலக்கியம் ♦ 81