பக்கம்:கேட்கவில்லை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ. வி. பி. ஆசைத்தம்பி மாட மாளிகைகளையும் மண் குடிசைகளையும் காண்ப வர்கள் என்ன நினைப்பார்கள் ? மதுரையிலே பிரமாண் மாக அமைந்துள்ள திருமலை மஹாலைப் பார்த்து. இது என் அப்பன் வீட்டுக் கோழிகூடு போல இருக்கிறது" என்று திருமலையாரின் மனைவி கூறினாளாம். ரஷ்ய ஜெயில்களில் கைதிகள் இஷ்டம்போல் ஆடவும் பாடவும். படிக்கவும் அனுமதிக்கப் படுகிறார்கள். மேல்நாட்டு சிறைகளில் கைதிகள் இஷ்டம்போல் சிகரெட் குடிக்கலாம். கைதிகள் பொழுதை ஆனந்தமாகக் கழிக்க, சினிமா. நாடகம், இதர விளையாட்டு வசதிகள் ஆகியவை மேல்நாட்டு ஜெயில்களில் உண்டு. க ரஷ்ய ஜெயில்களில் கல்வி கற்க விரும்பும் கைதிகள், சர்வகலாசாலைவரை படித்துவர அனுமதிக்கப்படுகிறார்கள். சிறையில் படித்துப் பட்டம் பெற்று பெரிய பதவிகளில் இருக்கும் கைதிகளும் ரஷ்யாவில் இருக்கிறார்கள். ஆனால் - இந்திய சிறை இதற்கு நேர்மாறானதாகும். மேல் நாட்டு சிறைகள் கைதியும் மனிதன்தான் என்ற கொள் கையைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் இந்திய சிறை கைதி யை மனிதனாக அல்ல, மிருகமாக மதிக்கிறது. இதனால்தான் கர்னல் வெட்ஜ்வுட் இந்திய சிறைகளை இகழ்ந்து கூறினார். 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/51&oldid=1735790" இலிருந்து மீள்விக்கப்பட்டது