பக்கம்:கைதி எண் 6342.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

களை ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆகவே அவை நமக்கு இப்போதும் வேண்டாம் என்று வாதாடி, எவரேனும் ஒருவர், ஏதேனும் ஓர் ஏட்டிலே ஒரு இடத்தை விளக்கிக்காட்டி, நீங்கள் கண்டிக்கும் முறைகளைத் தமிழர்கள் முன்பு கொண்டிருந்தனர் காணீர் என்று இடித்துரைத்து, நாம் அதற்கு ஒரு சமாதானம் தேடிக்கொண்டு இருப்பதைவிட, தேவையற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, நெறிமுறை, சட்டதிட்டம் முன்பே தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருந்தாலும், அவை நமக்கு வேண்டுவதில்லை என்று கூறுவது தான், வீணான சிக்கலுக்குள் நம்மைச் சிக்கவைத்துக் கொள்ளாத முறை. நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சில முறைகள் முன்பே இருந்தனவா இடையிலே நுழைந்தனவா என்பதுபற்றி அல்ல; அவை தேவையா வேண்டாமா என்பதுதான்" என்று கூறினேன்.

பிறகு, வழக்கம் போல், இதழ்கள் தரப்பட்டன; அவைகளைப் படித்து, செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

சின்னச்சாமியின் தியாகம்பற்றி, நமது கழகத்தோழர் ராமசாமி சட்டசபையில் பேசியிருந்ததைப் படித்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது. மற்றோர் இளைஞன் இதுபோலச் செய்யப்போவதாக அறிவித்திருந்ததாகச் செய்தி கண்டேன்; திடுக்கிட்டுப் போனேன். இருந்து அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்; இறந்து விடுதல் தேவையற்ற முறை; அத்தகைய எண்ணம் ஏற்பட விடக்கூடாது" என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன்.

வேறோர் இளைஞன் சட்டமன்ற நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, என்னை விடுதலை செய்யவேண்டும் என முழக்கமிட்டதாகவும், அதற்காகக் கைது செய்யப்பட்ட தாகவும் பத்திரிகையில் கண்டேன். இதுவும் தேவையற்ற செயல். நானும் நண்பர்களும், சிறையில் அடைபட்டுக் கிடப்பதன் மூலம், தமிழர்களின் சிந்தனையைக் கிளறி, மொழி ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியை எழச் செய்யலாம் என்று நம்பி, கம்பிகளுக்குப் பின்னால் கிடக்கிறோம். மொழி ஆதிக்கத்தின் கேடுகளை மற்றவர்கள் உணரும்படி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/107&oldid=1575571" இலிருந்து மீள்விக்கப்பட்டது