108
யாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுவது முறையேயன்றி, எங்களை 'விடுதலை' செய்யச் சொல்லி முழக்கமிடுவதும், கிளர்ச்சி செய்வதும் முறையுமல்ல, தேவையுமில்லை.
தூத்துக்குடியில் அரசியல் சட்டத்தைக் கொளுத்திய இளமுருகுபொற்செல்வி குழுவினரின் வழக்கு, மிகத் துரிதமாக முடிவுற்றது, மகிழ்ச்சிகரமானசெய்தி. ஆறுமாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இளமுருகு ஆசிரியராகப் பணியாற்றியவர்; பொதுத்தொண்டில் நீண்டகாலமாக உள்ளவர். அவருக்கு 'சி' வகுப்புதான் என்று விதித்திருப்பது, நாம் காங்கிரசாட்சியில் இருக்கிறோம் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.
இன்று பிற்பகல், நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டின்படி சமையலுக்குத் தேவையான பண்டங்கள் எவ்வளவு அளிக்கப்படும் என்பதற்கான் 'பட்டியல்' பார்த்தசாரதியிடம் தரப்பட்டது. பட்டியலைக் காண்பதற்காகத் தந்திருக்கிறேன். எங்கள் எழுவருக்கு இரண்டு வேளை சாப்பாட்டிற்கும் காலை சிற்றுண்டிக்கும் சேர்த்து,
கிலோ கிராம்
அரிசி
1—610
கோதுமை
0—805
பருப்பு
1—190
புளி
0—210
மிளகாய்த் தூள்
0—140
உப்பு
0—280
வெங்காயம்
0—210
காய்கறி
1—610
உருளைக்கிழங்கு
0—420
கடுகு
0—070
மிளகு
0—070
நல்லெண்ணெய்
0—210
சர்க்கரை
0—210
காபிதூள்
0—105
பால்
லிட்,2—094