128
தண்டனை முறைகள் பற்றியும், இன்று மாலை, நாங்கள் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது.
சுந்தரத்தைக் காண, நண்பர் ராதாமணாளன் வந்திருந்தார். நாம் நடத்தும் அறப்போர் பற்றியும், நாமெல்லாம் சிறைப்பட்டிருப்பது குறித்தும், நாட்டிலே ஒருவிதமான பரபரப்பும் எழவில்லை என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும், உண்மையில், மக்கள் மனதிலே பரபரப்பு உணர்ச்சியும் பரிவும் நிரம்ப இருக்கத்தான் செய்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வட்டாரத்தினர்கூட இதனை உணர்ந்துவிட்டிருக்கின்றனர் என்று ராதாமணாளன் கூறியதாகச் சுந்தரம் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
தெளிவுள்ள மக்கள் இந்தி ஆதிக்கத்தால் விளையக்கூடிய ஆபத்தை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஐயம் எழுந்ததே இல்லை. அதுபோலவே நமது மனதுக்குச் சரி என்று பட்ட முறையில் மக்களுக்கு நலன் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில், நாம் மேற்கொண்டுள்ள அறப்போர் குறித்து, மனதை அடகுவைத்துவிடாத எவரும், பாராட்டத்தான் செய்வார்கள் என்பதிலேயும் எனக்கு ஐயம் ஏற்பட்டதில்லை. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருப்பவரும், காங்கிரசாரிடம் தொடர்பு கொண்டுள்ளவருமான ராதாமணாளன், சுந்தரத்திடம் கூறியது, நான் ஏற்கனவே கொண்டிருந்த எண்ணத்தை உறுதிப்படுத்திற்று.
மதியைக் காண, அவருடைய துணைவியாரும் குழந்தையும் வந்திருந்தனர். மதியின் பெண்குழந்தை, இந்தச் சிறையை "அப்பாவீடு" என்று எண்ணிக் கொண்டு பேசுகிறதாம்! குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று ஆசை எழத்தான் செய்கிறது—ஆனால் எங்கே உட்புறம் பார்த்துவிடுகிறார்களோ என்று, இரும்புக் கம்பிகளை இருப்புப் பலகை போட்டு வேறு அடைத்துவைத்து விட்டிருக்கிறார்களே!!
இன்று என்னைக்காண நெடுஞ்செழியன் விரும்பியிருக்கிறார்—ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. திங்-