பக்கம்:கைதி எண் 6342.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

கட்கிழமை வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி கூறிவிட்டுச் சென்றார்.

புகழ்மிக்க, எச்.ஜி.வெல்ஸ் எழுதிய நூல் ஒன்று கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியது—பழைய முறைகளும் கொள்கைகளும் முளைவிடும் பருவத்தை விளக்கும் விதமாக அமைந்துள்ள ஏடு—இன்று அந்த ஏடுதான், தூக்கம் வருகிறவரையில்.

காலையில், கலைக்களஞ்சியத்தில் சில பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் 1938-ல் சிறை புகுந்த போது, தமிழாசிரியர் சிங்காரவேல் முதலியார், தன்னந்தனியாக இருந்து தயாரித்த 'அபிதான சிந்தாமணி'யைத்தான், துணைக்குக் கொண்டிருந்தேன். சென்னை, தொண்டைமண்டல துளுவ வேளாளர் பள்ளித் தமிழாசிரியரும், என் நண்பருமான எஸ். எஸ். அருணகிரிநாதர் கொடுத்திருந்தார். கலைக்களஞ்சியம், மிகுந்த பொருட்செலவில், பலவிற்பன்னர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது—அபிதான சிந்தாமணி, ஒரே ஒரு வித்தகரின் அறிவாற்றலின் விளைவு! கலைக் களஞ்சியத்தைப் பார்த்த போது, எனக்கு, 'அபிதான சிந்தாமணி' பற்றிய எண்ணமும், அதனை ஆக்கித்தந்த சிங்காரவேலர்பற்றிய நினைவுந்தான் மேலோங்கி நின்றது.

9.நினைவலைகள்-கவலைகள்!
(கடிதம் 9, காஞ்சி—15-11-64)

தம்பி!

8—3—64

வேலை செய்பவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மனதுக்கு மகிழ்ச்சி தேடிட, பல நிகழ்ச்சிகளில் தம்மை ஈடு படுத்திக்கொள்ளும் நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த ஞாயிறு, சிறையைப் பொறுத்தவரையில் வெறிச்சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/129&oldid=1578472" இலிருந்து மீள்விக்கப்பட்டது