142
மான முடிவுக்கு வந்தார் என்றால், எனக்கு மிகுந்த வேதனை ஏற்படாமலிருக்க முடியுமா? ஆனால், என்ன செய்ய முடியும்! நிலைமைகளை அறிந்து கொள்ளவோ, அவரிடம் பேசி நிலைமையைச் சீராக்கவோ முடியாத இடத்திலல்லவா இருக்கிறேன். பகலெல்லாம், இங்குள்ள நண்பர்கள் இது குறித்தே மிகச் சங்கடப்பட்டுக் கொண்டனர். எனக்கு, என்னுடைய மனச்சங்கடத்தை அடக்கிக் கொள்ளும் வேலையுடன், மற்ற நண்பர்களின் சங்கடத்தைத் துடைக்கும் பொறுப்பும் சேர்ந்து, நெஞ்சுக்குப் பெரும் சுமையாகிவிட்டது. கழகத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் அமைந்து விட்ட பாசம், சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல, தூண்டிவிட்டுக் கிளம்பியதுமல்ல, தானாக மலர்ந்தது. 'கனி என் கரத்திலே வந்து விழுந்தது' என்று பெருமிதத்துடன், 'நாடோடி மன்னன்' வெற்றி விழாக்கூட்டத்திலே நான் பேசியது என் நினைவிற்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்துவிடுவதோ, கழகம் அவரை இழந்துவிடுவதோ, நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. எனவே அவர், மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினாலும், கழகத்தை விட்டு விலகமாட்டார், என் நெஞ்சிலிருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியைத் துணையாகக் கொண்டு, மனச்சங்கடத்தை மாற்றிக்கொள்ள—குறைத்துக்கொள்ள முனைவதிலேயே இன்று பெரும் பகுதி சென்றுவிட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி, கிருத்தவ மார்க்கத் துவக்க நிலைபற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை.
ஒருபுறம், ராஜகோபாலின் 'உண்ணாவிரதம்'—மற்றோர்புறம், எம். ஜி. ஆரின் விலகல். எதற்கும் காரணமாக என் சொல்லோ செயலோ இல்லை—ஆனால், அவைகளால் ஏற்பட்டுவிடும் வேதனையின் முழு அளவும் எனக்கு. இப்படி ஒரு நிலைமை எனக்கு! நானாகத் தேடிக் கொண்டது—எனக்காக அல்ல, நாட்டுக்கு நல்லது விளையும் என்ற நம்யிக்கையுடன் நாம் நடத்திச்செல்லும் கழகத்துக்காக! என் இயல்பு தனித்தன்மை வாய்ந்தது; நான் கழகத்தை நடத்திச் செல்லும் முறை அந்த இயல்பை ஒட்டியே பெரி-