பக்கம்:கைதி எண் 6342.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

நடராசன் ஆகியோருடைய வழக்கு மறு நாள் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்று நடராசன் கூறினார்.

அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, உள்ளே வந்ததும், நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். என்ன சேதி, நடராசனா வந்திருந்தது? மேயர் தேர்தல் எப்படி? என்றெல்லாம் கேட்டபடி.

நடராசன் தைரியமாகவே இருக்கிறார்; கழகம் வெற்றிபெறும் என்கிறார் என்று கூறினேன். என்றாலும் இரவு நெடுநேரம் வரையில் மேயர் தேர்தல் சம்பந்தமான கவலையுடனேயே இருக்க நேரிட்டது—இத்தனைக்கும் ஒரு சிறைக்காவலாளி, கிருஷ்ணமூர்த்தி மேயராகவும், கபால மூர்த்தி துணைமேயராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டார்கள் —55 வாக்குகள் என்று கூறியிருந்தார்—என்றாலும், பத்திரிகையில் செய்தி பார்க்கிறவரையும், நிம்மதி எப்படி ஏற்படும்? இது குறித்தே கவலை மிகுந்திருந்ததால், இன்று இரவு குறிப்பு எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டேன்—அதிகமாகப் படிக்க விருப்பம் எழவில்லை.

17—3—64

இன்று காலையில், சிறை மேலதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி, வழக்கப்படி நடந்தேறியது.

காலையில், வெளியே இருந்து உள்ளே வந்திருந்த சிறைக்காவலாளிகள் மேயர் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்கள்; மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில் இருந்தோம். வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே, நூற்புவேலை செய்தேன். பனிரெண்டு மணிக்கு மேல் பத்திரிகைகள் தரப்பட்டன—வெற்றிச் செய்தியைப் படித்துப் படித்துச் சுவைத்தோம். பொள்ளாச்சி நகராட்சித் தலைவராகக் கழகத்தோழர் வெற்றிபெற்றார் என்ற விருந்தும் கிடைத்தது. பொள்ளாச்சி மோட்டார் மன்னர் மகாலிங்கம் அரசோச்சும் ஊர் ! டில்லி இரும்பு மந்திரி சுப்ரமணியம் அவர்களின் தொகுதி, காங்கிரஸ் ஆதரவு ஏடுகளே எழுதியுள்ளபடி இதுவரையில் காங்கிரஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/150&oldid=1650692" இலிருந்து மீள்விக்கப்பட்டது