158
வந்திருப்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை.
வெற்றிச் செய்திகளால் ஏற்பட்ட உற்சாகத்தில், என் கரத்திலே 'தக்ளி' வெகுவேகமாகச் சுழன்றது.
முன்புவடார்க்காடு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவரும், இப்போது கதர்த் துறையில் பணிபுரிபவருமான அதிகாரி ஒருவர், சிறையில் நூற்பு வேலை—காகிதம் செய்தல் ஆகியவைகளைப் பார்வையிட இன்று வந்திருந்தார்.
எங்களுடைய நூற்பு வேலையைப் பார்த்து மகிழ்ந்தார்.
இன்று பிற்பகல், துணைமேயர் கபாலமூர்த்தி என்னைக் காண வந்திருந்தார்.
இன்று, சென்னை மாநகராட்சிமன்றத் துணைத் தலைவராக வந்த கபாலமூர்த்தி, இதே சிறையில் சென்ற ஆண்டு கைதியாக இருந்தவர்தான்!!
என்னைப் பார்த்த உடனே மகிழ்ச்சியால், குரல் தழதழத்தது கபாலமூர்த்திக்கு.
கபாலி, குமரேசன், ராகவலு இவர்களுடன் சிந்தாதிரிப்பேட்டைப் பழங்குடிமக்கள் வாழும் பகுதியில், ஒரு பாலத்துக்குப் பக்கத்திலே, நான் ஒவ்வொரு மாலையும் பேசிக்கொண்டிருப்பேன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு—சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்துக்கு நான் அப்போது தலைவன், எத்தனை உற்சாகம்! என்னென்ன பேச்சு! அந்த நாட்களில்! அதே கபாலமூரீத்தி, துணைமேயர்!
அன்று கபாலியைப் பார்த்தபோது, பாலத்தருகே உலவிய நாட்கள் நினைவிற்கு வந்தன. பேச இயலவில்லை. என் எண்ணம் முழுவதையும், விளக்கிட முதுகைத் தட்டிக்கொடுத்தேன்.
என்னிடம் எப்போதுமே கூச்சத்துடன் நடந்து கொள்ளும் பழக்கம் கபாலிக்கு—இப்போது நான் 'கைதி'-