பக்கம்:கைதி எண் 6342.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

யாக, கபாலி துணைமேயராக—கூச்சம் மேலும் அதிகமாகிவிட்டது. தேர்தல் நடைபெற்ற முறைபற்றி ஏதேதோ கேட்க எண்ணினேன்—எனக்கும் பேச இயலவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதே, பேச்சைவிடப் பொருள் மிகுந்ததாக இருந்தது.

மேயர், தமது மகனுடைய திருமண சம்பந்தமாகக் கோவை சென்றிருப்பதாகக் கபாலி கூறினார். சுறுசுறுப்பாகவும் அக்கறையுடனும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டேன். பணிபுரிவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

இன்று 'கல்கி' இதழில், ரா. கணபதி என்பவர் எழுதியிருந்த 'ஜயஜய சங்கர' என்ற தொடர் கட்டுரையைப் படித்தேன். எழுதப்பட்டுள்ளதில் முழு ஈடுபாடு கொண்டு எழுதியிருக்கிறார். சங்கரர், தமது காலத்தில், நாட்டிலே தலைவிரித்தாடிய அறுபதுக்கும் மேற்பட்ட போலி மார்க்கங்களை அழித்து, அத்வைதத்தை நிலைநாட்டினார் என்பது குறித்து, விளக்கமளித்துள்ளார். சங்கரர் பெற்ற வெற்றி எத்துணை சிலாக்கியமானது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட ஒரு எண்ணம், இந்த ஏடு படித்த பிறகு மேலும் உறுதிப்பட்டது. தூய்மைப்படுத்தும் இயக்கம் எவ்வளவு வெற்றி பெற்றாலும், மீண்டும் அக்ரமம்—அநீதி—தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்த முடியவில்லை—சங்கரரின் திக் விஜயம்—'வாதம்'—'பீடஸ்தாபிதம்' ஆகியவைகளுக்குப் பிறகு, அத்வைதம் அரசோச்சிய இடத்திலே 'துவைதமும்'—'விசிஷ்டாத்வைதமும்' மலர்ந்து, மகுடம் சூட்டிக் கொண்டன என்று அறியும்போது, தூய்மைப்படுத்தும் இயக்கம் பெறும்வெற்றி, மீண்டும் கேடுகள் தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்துவதில்லை என்ற எண்ணம் வலிவு பெற்றது. அதிலும் சங்கரர் வாதிலே வென்ற இருவர்—குமாரிலபட்டர்—மண்டனமிசிரர்—ஒருவர் முருகன்—மற்றவர் பிரம்மா—சங்கரரோ சிவன்! சிவனாரே, இந்த இருவரையும் பூலோகத்தில் இவ்விதம் அவதரித்து இருங்கள், நாம் சங்கராக வந்து உம்மை வாதில் வீழ்த்துவோம் என்று கூறி அனுப்பினார் என்று சொல்லப்படுகிறது. ஏற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/159&oldid=1584363" இலிருந்து மீள்விக்கப்பட்டது