பக்கம்:கைதி எண் 6342.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

என்பதை உணருகிறேன். ஆனால் இந்தக் கட்டத்தை அவர்கள் மிகச் சிறந்த ஒரு பயிற்சி வாய்ப்பு என்ற முறையில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். கழக நிர்வாக சம்பந்தமான அலுவல்களிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொண்டால், கழக வளர்ச்சிக்காக மேலும் சிறந்த முறையில் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்ற முடியும். இந்த என் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், கழகத்தின் நிர்வாக அலுவல்களை மேற்கொள்ள மற்றவர்கள் முனையவேண்டும். நான் சிறைப்பட்டிருக்கும் நாட்கள் இதற்கான வாய்ப்பாகக் கொண்டிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

கழக நிர்வாகத்திலே வந்துள்ள நகராட்சிகளிலே, புது முறைகளைப் புகுத்தி, கழகம் ஆட்சி நடத்தும் தகுதி வாய்ந்தது என்பதனை மக்கள் உணரும்படி செய்திட வேண்டும் என்று இங்கு ஆர்வத்துடன் நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். பெல்ஜியம் நாட்டிலே, ஒரு கட்சி நகராட்சி ஒன்றிலே நடத்திக்காட்டிய நிர்வாகத்தின் தரத்தையும் திறத்தையும் கண்டு, நாடாளும் வாய்ப்பையே அந்தக் கட்சிக்கு மக்கள் அளித்தனர் என்று ஏதோ ஒரு ஏட்டிலே தான் படித்ததாகப் பொன்னுவேல் கூறினார். கட்சி மாச்சரியம் காரணமாக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை நடத்திய கழகத்தின்மீது ஆளுங்கட்சியினர் அபாண்டங்கள் சுமத்தினர் என்றாலும், பொதுவாக நமது கழகத்தோழர்கள் மெச்சத்தக்க முறையிலேயே மாநகராட்சி மன்ற நிர்வாகத்தை நடத்தி இருக்கின்றனர்—தவறுகள் செய்திருந்தால், மேலே உட்கார்ந்து கொண்டிருக்கும் காங்கிரசு அரசு, சும்மா விட்டிருக்குமா? மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையே கலைத்து விட்டிருக்குமே!குற்றம் கண்டுபிடிக்க இயலாத முறையிலேதான் நிர்வாகம் நடத்தப்பட்டிருக்கிறது என்று நான் கூறினேன். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முனுசாமி நல்ல முறையிலே அமைத்திருக்கிறார் என்பதை "இந்து" இதழே கூட எடுத்துக்காட்டியிருந்தது என்று நண்பர்கள் நினைவு படுத்தினார்கள், ஆமாம்! தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'பட்ஜட்' என்று 'இந்து' குத்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/165&oldid=1584417" இலிருந்து மீள்விக்கப்பட்டது