166
லாகக்கூட எழுதிற்று; ஆனால் மக்களாட்சி முறையில் மக்களைத் திருப்திபடுத்தும் விதமாக 'பட்ஜட்' தயாரிப்பது குற்றமல்ல என்று நான் சுட்டிக்காட்டினேன்.
"ஏதேதோ வீண்பழிகளைச் சுமத்துகிறார்கள்; ஒரு மாட்டை அடித்துக் கொன்றுவிட்டார்கள் கழகத்தார்—மாடு காங்கிரசின் தேர்தல் சின்னம் என்பதற்காக."
"இது நடைபெறவே இல்லை, அபாண்டம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்; மெயில் இதழிலே வெளியிட்டிருந்தார்கள்."
"ஆமாம்—அப்படியே முறைதெரியாத யாரோ சிலர் அதுபோலச் செய்ந்திருந்தால்கூட, அது கண்டிக்கத் தக்கது என்றாலும், அதற்காக கழகத்தை அதற்குப் பொறுப்பாக்கிக் கண்டிக்கலாமா?" என்று கூட மெயில் எழுதியிருந்தது.
"இன்று பத்திரிகையிலே பார்த்தீர்களா அண்ணா! அமெரிக்காவிலே ஒரு அரசியல் கட்சி எதிர்க்கட்சியின் தேர்தல் சின்னமாக உள்ள யானையை மனதிலே வைத்துக் கொண்டு, கட்சிவிழா விருந்தில், யானைக்கரி சமைக்கப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலே வேட்டையாடிக் கொன்று, யானைக்கரியைப் பதப்படுத்தி அமெரிக்காவுக்குக் கொண்டு வர ஏற்பாடாம்."
"இதுபற்றி கண்டனத் தலையங்கம் எழுதக் காணோம். நடக்காத ஒன்றை வைத்துக்கொண்டு நமது கழகத்தைக் கண்டிக்கிறார்கள்."
இப்படி நண்பர்கள் பேசிக்கொண்டனர். உழைப்பாளி கட்சிக்குச் சின்னம் 'கோழி'—உழைப்பாளி கட்சியும். கோழிச் சின்னம் கொண்டிருந்த சில சுயேச்சையாளரும் தேர்தலில் தோற்றபோது, காங்கிரசார் நடத்திய வெற்றி ஊர்வலத்தில், கோழியை அறுத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள் என்று நான் கூறினேன்.
"நம்முடைய கழகத்திடம் மட்டும் இந்த அளவுக்குப் பகை உணர்ச்சிகொள்ளக் காரணம் என்ன?" என்று நண்பர்கள் கேட்டனர்.