பக்கம்:கைதி எண் 6342.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

23—3—64

இரண்டு நாட்களாக, ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதியுள்ள 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதனாலே குறிப்பு ஒரு நாள் எழுதவில்லை.

பகலில் படிப்பதற்கு அதிகநேரம் கிடைப்பதில்லை. காலையிலிருந்து மாலை நாலரை மணி வரையில், நூற்பு வேலை இருக்கிறது. இரவு மட்டுந்தான் படிக்க வசதி கிடைக்கிறது.

சங்கரவிஜயம் படித்துமுடித்தவுடன், இந்தப் புத்தகம்—அதாவது முற்றிலும் வேறான ஒரு கருத்துலகில் உலவுகிறேன். சமுதாய வளர்ச்சியை விளக்கும் இந்த ஏடு எழுதியவர் லெனின்கிராட் சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றிய பேரறிவாளர். கதை வடிவத்தில், கி. மு. 6000-த்திலிருந்து கி. பி. 1942-வரையில், மனித சமுதாய வளர்ச்சிக்கான விளக்கம் தந்திருக்கிறார்—பொது உடைமையாளரின் கோட்பாட்டின் அடிப்படையில்.

குறிப்பு எழுதாமலிருந்ததற்கு மற்றோர் காரணமும் உண்டு. காய்கறி நறுக்கியதால், என் வலது கரத்தின் ஆள்காட்டி விரலில் சிறிதளவு காயம் ஏற்பட்டுவிட்டது—முன்பு ஒரு நாளையக் குறிப்பிலே எழுதியிருந்தேனல்லவா, சட்டை கிழிந்து விடுவதற்கும் சதை பிய்ந்துவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று; அதனை நானே உணருவதற்கான ஒரு வாய்ப்பு. சிறிதளவுதான் சதை பிய்ந்துவிட்டதென்றாலும், எறிச்சல் அதிகமாகிவிடவே, எழுத இயலவில்லை. ஏதோ மருந்து அளித்தார்கள்—இயற்கையாகவே குணமாகி வருகிறது.

இன்று இங்கு நண்பர்கள், கழகப் பிரசாரத்துக்காக நாடகங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து மெத்த ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்பு நானும் நமது நண்பர்களும் நடத்திக்கொண்டு வந்த நாடகங்களை, இனி நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்—நாடகத் தடைச்சட்டம் மிகக்கண்டிப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/168&oldid=1584430" இலிருந்து மீள்விக்கப்பட்டது