பக்கம்:கைதி எண் 6342.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

செங்கற்பட்டு உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தேர்தலில், கழகத்தின் சார்பில் நண்பர் ஆசைத்தம்பி ஈடுபட்டிருக்கும் செய்தி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதுபற்றிக் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டோம். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்தவரும், அந்த மாவட்டத்திலே பல ஜெமீன் குடும்ப ஆதரவு பெற்றவரும், அமைச்சர்களின் அரவணைப்பைப் பெறக்கூடியவருமான வி.கே. ராமசாமி முதலியார் போட்டியிடுவதால், மெத்தக் கடினமாகவே இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள்; எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

12. நிலவு, கழக வெற்றி,
சிறைச்சாலை நிலைமைகள்

(கடிதம் 12, காஞ்சி—6-12-64)

தம்பி!

வகுப்புக் கலவரம், உ. பிரதேச சட்ட மன்றத்துக்கும் நீதி மன்றத்துக்கும் இடையே கிளம்பியுள்ள 'உரிமை' மோதுதல் போன்ற செய்திகள், உள்ளபடி கவலை தருவனவாக உள்ளன. வடக்கே வகுப்பு மாச்சரிய உணர்ச்சி மங்கவில்லை. எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலை இப்போதைக்கு மட்டுமல்ல, களையப் படும்வரையில், ஆபத்தைக் கக்கியபடியே இருக்கும் என்று தோன்றுகிறது. வகுப்பு மாச்சரிய உணர்ச்சி வடக்கே எந்த அளவிலே இருக்கிறது என்பதுபற்றி நண்பர்களிடம் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இயல்பாகவே அமைந்துள்ள 'சமரச நோக்கம், உண்மையிலேயே பாராட்டிப் போற்றத்தக்கது என்று பேசிக் கொண்டோம்.

சிறையைப் பார்வையிடுவதற்காக மேயர் வரப்போகிறார் என்ற பேச்சு இங்கு இரண்டு நாட்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/171&oldid=1651216" இலிருந்து மீள்விக்கப்பட்டது