189
என்ற நாடகம் நடத்தப்பட்டுவந்தது. திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு நாடகக்குழு, இதுபோன்ற நாடகங்களை நடத்திக்கொண்டுவந்தது. பிறகு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அளித்த 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் நடத்தப்பட்டது. ஒரு முறை அதிலே இப்போதைய திருவாசகமணி, கே. எம். பாலசுப்பிரமணியமும், குத்தூசி குருசாமியும் நடித்ததுண்டு. இந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்டு, நாடகக் குழுக்களே இதனை நடத்தலாயின. பி. ஜி. குப்புசாமி நாயுடு போன்ற நடிகர்கள் இதிலே ஈடுபட்டனர். நமது இயக்கத் தோழர்கள் இங்கும் அங்குமாக, சீர்த்திருத்த நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்தனர். நடிகவேள் எம்.ஆர்.ராதவின் நாடகம்—சி. பி. சிற்றரசு எழுதியது—முதன்முறையாக, திருச்சி திராவிடர் கழக மாநாட்டிலேதான் நடத்தப்பட்டது; மிகக் குறைந்த செலவில். அதற்கான பணத்தை வாங்கிக்கொடுக்கவே பெரியாரிடம் மெத்தப் போராடவேண்டி இருந்தது. நண்பர் ஏ. கே. வேலன் ஒரு சில நாடகங்கள் நடத்தினார். சி. பி. சிற்றரசு சில நாடகங்களை நடத்திக் காட்டினார், நாகைத் தோழர் கோபால் ஒரு நாடகக்குழுவே அமைத்து, சில ஆண்டுகள் நடத்திவந்தார்; அதிலே கருணாநிதி வேடம் தாங்கினார். கருணாநிதியின் சாந்தா என்ற நாடகம் நல்ல செல்வாக்குடன் இருந்தது. பாவலர் பாலசுந்தரம் ஒரு நாடகக்குழு அமைத்து நடத்தினார். இவ்விதமாக இயக்கப் பிரசாரத்தில் நாடகம் இணைந்து வளர்ந்தது.
டி. கே. எஸ்.நாடகக் குழுவிலிருந்து டி. வி. நாராயணசாமியும், எஸ். எஸ். இராஜேந்திரனும் விலகி, சீர்திருத்த நாடகங்களை நடத்தத் தொடங்கினர். நான் எழுதிய சந்திரோதயம் என்ற நாடகம் முதல் முதலில் வடாற்காடு மாவட்ட, திருவத்திபுரத்தில் நடைபெற்றது. இரண்டொரு நாடகங்களுக்குப் பிறகு, அதிலே, நடிகர் குழுவைச் சேர்ந்தவர்களும் ஈடுபடலாயினர்.
முன்னேற்றக் கழக துவக்க நாட்களில், கழக கட்டடநிதி, அச்சகநிதி, வழக்குநிதி போன்றவைகளுக்காக