192
பினும், என்னிடம் கொண்ட கனிவு மாறி இருக்காது என்று அன்பழகனிடம் கூறினேன்.
பொதுவாக, இந்தி ஆதிக்கத்தின் முழுக்கேட்டினை, மக்கள் நேரிடையாக இன்னும் சந்திக்கவில்லை—அதனால் தான், சிலர் இதனைக் கவனிக்க வேண்டிய அவசியமில்லாத பிரச்சினை என்று கருதுகிறார்கள். வேகமும் பளுவும் நாளாகவாக வளரும்—அப்போது, இப்போது 'ஏனோதானோ'வென்று உள்ளவர்கள்கூட, இந்தி ஆதிக்கத்தின் கேட்டினை உணர்ந்து துடித்து எழுவார்கள், என்று கூறினேன்.
இன்றும், கம்யூனிஸ்டு கட்சியிலே பிளவு வெகுவாக விரிவாகிவிட்டதற்கான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன—அவைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
இரவு, தூக்கம் வருகிறவரையில், பொன்னுவேலிடம், காஷ்மீர் பிரச்சினைபற்றி பேசிக்கொண்டிருந்தேன்—(இப்போது என்னுடன் பொன்னுவேல்—வெங்கா—இருவரும் துணை இருக்கிறார்கள்) ஷேக் அப்துல்லாவைப் பத்து ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்திருந்ததால் ஏற்பட்ட கெட்ட பெயரும், தொடுத்த வழக்கை நடத்த முடியாமல் திரும்பப் பெற்றுக்கொண்டதால் ஏற்பட்ட ஏளனநிலையும், உள்ளபடி தாங்களாகத் தேடிக்கொண்டவைகள். பிரச்சினை மிகவும் சிக்கலானதாகிவிட்டது என்பதுபற்றி விவரித்துக்கொண்டிருத்தேன்.
இரண்டு நாட்களாக, தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை, சிறைப் படிப்பகத்தார் தொகுத்து வைத்திருக்கிறார்கள்—அவைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான கதைகள், கவிதைகள்; கருத்து விளக்கம் அதிகம் இல்லை. ஆனால் செல்வவான் வீட்டு மாநிற மங்கை மினுக்குத் தைலத்தால் பளபளப்பது போல, அழகிய ஒலியங்களால், கதைகள் அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன. சில கதாசிரியர்கள் வேண்டுமென்றே, 'கழகத்தை'—திருவிழாக்களிலே காளையர்கள் கன்னியர்கள்மீது உரசிவிட்டு மகிழ்வது போல—இரண்டொரு இடங்களில், தாக்கியும் இருக்கிறார்கள். வைதீக கருத்துகளையும் வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள். இத்தகைய கதைகளையும் கட்டுரை-