பக்கம்:கைதி எண் 6342.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

என்று கேட்டேன். அனைவரும் இராமமூர்த்தி கட்சிதான் என்று கூறினார்.

ராமமூர்த்தி கட்சி என்பது காங்கிரசை எதிர்க்கும் அணியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான், ஆனால் அந்த அணி, சீனாக் கட்சி என்று கூறப்படுகிறதே, அது கண்டிக்கத்தக்கதாயிற்றே. இந்தப் பிரச்சினையில் காஞ்சிபுரத்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைமை என்ன என்று கேட்டேன். அதுபற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

தனிக் கட்சியே துவக்கிவிடத் திட்டமிடுகிறார்கள் ராமமூர்த்தி அணியினர் என்று சொன்னார்.

பத்திரிகையிலும் அப்படித்தான் செய்தி வருகிறது. டில்லியில் எ. கே. கோபாலன் போன்றாரும் இதுபோலத் தான் என்னிடம் கூறினார்கள். ஆனால் தனிக்கட்சி துவக்கி என்ன பலன்? அதிகமான பலன் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை என்று கூறினேன். பொதுவாக, கம்யூனிஸ்டுகள், தங்களுடைய வளர்ச்சியைவிட, கழகத்தை அழிப்பதையே முக்கிய குறிக்கோளாக, உடனடித் திட்டமாகக் கொண்டுவிட்டிருக்கிறார்கள் என்று மணி கூறினார்.

அவர்கள் நினைப்பது போலவே ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம், அதனால் யாருக்கு ஆதாயம்? காங்கிரசுக்குத்தானே! கழகத்தை ஒழிக்க காங்கிரசுடன் குலவுவது, கம்யூனிஸ்டு கட்சிக்கு என்ன பலன் கொடுக்கும் என்று நான் கேட்டேன். அந்தக் கேள்வி எழும்போது கம்யூனிஸ்டுகள் அதிர்ச்சி அடைகிறார்கள் —பதில் கூறுவதில்லை என்றார் மணி.

காமராஜரும், பத்திரிகைகளும் ஏன் இப்போது கப்யூனிஸ்டுகளைத் தட்டிக் கொடுக்கிறார்கள் என்று நண்பர்கள் கேட்டனர்.

இது அவருடைய பழைய வித்தைதானே! நப்பாசை என்று சொல்லலாம். பெரியார் தி.மு. கழகத்தைத் தாக்கியபோது, காமராஜர் தூபமிட்டார். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/198&oldid=1585835" இலிருந்து மீள்விக்கப்பட்டது