பக்கம்:கைதி எண் 6342.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

எனவே நண்பர்கள் அதுபற்றிக் கேட்டார்கள்—நான் அங்குச் சென்று வந்த நிகழ்ச்சிபற்றிக் கூறினேன். அதைத் தொடர்ந்து, விஜயநகரம்—ஹம்பி இடிபாடுகள் பற்றிப் பேச்சு எழுந்தது. அங்கு நான் கண்டவைகள் பற்றியும் கூறினேன்.

சென்ற ஆண்டு நான் சிரவணபலகோலா பற்றி எழுதியதைப் படித்துவிட்டு, தான் போய்ப் பார்த்துவிட்டு வந்ததாக, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி என்னிடம் கூறினார்.

போகப்போகிறார்களோ இல்லையோ, இங்கு இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி நான் கூறியதைக் கேட்ட நண்பர்கள், பல இடங்களுக்குச் சென்றுவரப் போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

அரக்கோணம் ராமசாமி, தனது தொகுதியில் உள்ள மகேந்திரவாடி என்ற ஊரையும், ஏரியையும் நான் அவசியம் வந்து பார்க்கவேண்டும்—அந்த இடம் பல்லவர்கள் காலத்தது என்று கூறினார். வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

ஷேக்அப்துல்லா நிலைமைபற்றியும், கம்யூனிஸ்டு கட்சியின், பிளவுபற்றியும், இங்கு நண்பர்கள் திகைப்புடன் பேசிக்கொண்டுள்ளனர்.

13—4—64

நேற்றுப் போலவே இன்று மாலையும் புத்தாண்டுக்காக விடுமுறையாம்—விடுமுறை என்றால், கைதிகளுக்கு மாலை ஆறுமணிக்குள் கூடு என்பது நிலைமை.

இன்று காலையிலேயே, கவலை தரும் செய்தி—ஆசைத்தம்பி, அறிவழகன் தோற்றுவிட்டதாக. அவர்கள் தேர்தலில் ஈடுபட்ட செய்தி அறிந்தபோதே கவலைப் பட்டேன்—அந்தத் தேர்தல் முனைகள் (உள்ளாட்சி மன்றங்கள் தொகுதி, பட்டதாரிகள் தொகுதி) நமது கழகத்துக்குப் போதுமான தொடர்பு உள்ளவைகள் அல்ல. அந்த முனைகளில் செல்வாக்குப் பெறும் வழிமுறைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/210&oldid=1586285" இலிருந்து மீள்விக்கப்பட்டது