பக்கம்:கைதி எண் 6342.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213

எனினும், வழக்கு நடைபெற்று, 'புத்தகம் வெளியிட்டதிலே குற்றம் ஏதுமில்லை' என்று தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது.

ஆபாசமானது என்று கருதத்தக்க விதமாக, கருத்தும் நடையும் இருப்பினுங்கூட, பெரிய இலக்கிய மேதையான லாரன்சு, அந்த ஏட்டின் மூலம், மண வாழ்க்கை தூய்மையானது, தேவையானது, கனிந்திருக்க வேண்டியது. என்ற பண்பைத்தான் விளக்க முற்பட்டிருக்கிறார், என்ற காரணம் ஒப்புக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த ஏடு பற்றி, பல்கலைக்கழக இலக்கியப் பேராசிரியர்கள், நூலாசிரியர்கள், மனோதத்துவ ஆசிரியர்கள், மார்க்கத் துறை வித்தகர்கள், கல்விக்கூட அதிபர்கள், தமது கருத்தினைச் சான்றாக அளித்துள்ளனர்.

வழக்கிலே, இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடிய முறை மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

படிப்போரை மகிழ்ச்சியும் பயனும் கொள்ளச்செய்யும் விதமான ஏடு, இந்த வழக்கு பற்றிய ஏடு.

எல்லாவற்றையும் விட என் மனதைப் பெரிதும் ஈர்த்த பகுதி, மிகப் பெரிய இலக்கிய மேதையான லாரன்சு இதுபோல எழுதியுள்ளாரே என்பதற்காக, பேனா பிடித்தவனெல்லாம் இது போன்ற கதையையும், நடையையும் எழுத முற்பட்டுவிடக்கூடாது என்று, லாரன்சின் ஏட்டுக்காக வாதாடிய வழக்கறிஞரே அறிவுரை கூறியிருக்கும் பகுதிதான்.

வழக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது—1960-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபதாம் நாள் துவக்கம்.

எந்த ஏடு பற்றி வழக்கு நடைபெற்றதோ, அந்த ஏட்டின் ஆசிரியரான லாரன்சு இப்போது இல்லை—அவர் மறைந்து ஆண்டு முப்பது ஆகிறது.

14—4—64

வழக்கமான, 'கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி' இன்று. நாங்களும் எதுவும் பேசுவதில்லை. அதிகாரிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/213&oldid=1592081" இலிருந்து மீள்விக்கப்பட்டது