பக்கம்:கைதி எண் 6342.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

கண்டு அழுகிறான்! என்னிடம் அவ்வளவு அன்பு, என் மகனுக்கு—என்று கூறி உருகிப்போகிறான். இரவு பல முறை, இந்தக் கட்டத்தைப்பற்றிய நினைவு. எனக்கு அந்தக் குடும்பமே கண் முன் நிற்பதுபோல ஒரு எண்ணம். அந்தக் குடும்பமா? அதுபோன்ற குடும்பங்கள்!

15—4—64

இங்குள்ள சிறை அதிகாரிகளிலே சிலர், மதுரைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும், புதிய அதிகாரிகள் இங்குவர இருப்பதாகவும், பேச்சுக்கிளம்பிற்று. மருத்துவர்கூட மாறுகிறார்—இங்கு இருப்பவர், தஞ்சைக்குச் செல்கிறார். இன்று புதிய டாக்டர் எங்கள் பகுதிக்கு வந்திருந்தார்; இவர் நான் 1939-ல் சிறையில் இருந்த போது இங்கு டாக்டராக இருந்தவர்—பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவிட்டு, மீண்டும் இங்கு வந்திருக்கிறார். எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை; அவர் என்னிடம் பேசியபிறகுதான் எனக்குப் புரிந்தது.

இங்கு நண்பர்களுக்கு, சிறுசிறு நலிவுகள். மதிக்கு பாதத்தில் சுளுக்குபோல வலி—எலும்பு முறிவோ என்று சந்தேகம்—கட்டுபோடப்பட்டிருக்கிறது. சுந்தரத்துக்குக் கண்வலி, அன்பழகனுக்குக் காலில் வலி, இராமசாமிக்கு வயிற்றில் வலி, பார்த்தசாரதிக்கு இரத்த அழுத்தம், பொன்னுவேலுவுக்கு இருமல், இப்படி. சிலருக்கு மாத்திரை, சிலருக்கு மருந்து என்று மருத்துவரும் தந்தபடி இருக்கிறார். எல்லாமருந்துகளும் ஒரேமாதிரியாகவே இருப்பதாக நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் இரவு சாப்பிடுவதை நீக்கிவிட்டேன்—ஏதாகிலும் சிற்றுண்டிதான், உட்கொள்வது. அதுவே ஜீரணமாவது கடினமாக இருக்கிறது; அதற்கான மருந்து, நாளுக்கு இருவேளை உட்கொள்ளுகிறேன். கைவலிக்கு, கடுகு எண்ணெய் தேய்த்துக்கொள்கிறேன்—சுந்தரம் மெத்த அக்கறையுடன் ஒவ்வொரு நாளும், பிற்பகல் 'மூன்று மணிக்கு' தைலம் தேய்த்துவிடுகிறார். ஓரளவு பலன் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குள், நண்பர் அன்பழகன், பிண்டத்தைலம் என்று மற்றோர் மருந்து தருவித்திருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/216&oldid=1592159" இலிருந்து மீள்விக்கப்பட்டது