241
பிரிந்தவர்கள் நம்மோடு இருந்தபோது சட்டசபையில் நாம் 15—அவர்கள் போனபிறகு சட்டசபையில் நாம் 50—பாராளுமன்றத்தில் முன்பு 2—இப்போது 8—மீண்டும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நம்மிடம்—புதிதாகப் பத்துக்கு மேற்பட்ட நகராட்சிகள் நம் வசம்.
நாம் ஒரு அமைப்பிலிருந்து பிரிந்துவந்தபோதும் சரி, நமது அமைப்பிலிருந்து சிலர் பிரிந்து சென்ற போதும் சரி, நாம் நமது பாதையை ஒழுங்காக்கிக் கொண்டு, மனிதப் பண்பை இழக்காமல், நம்பிக்கையுடன் நெறியாகப் பணியாற்றி வெற்றி பெற்றிருக்கிறோம்.
இதுபற்றி இங்கு நான் எடுத்துச்சொன்னபோது, நண்பர்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
1—5—64
மேதினி போற்றிடும் மேதினம். வெளியே இருந்திருந்தால், ஏதேனும் ஓரிடத்தில் மேதினம்பற்றிப் பேசி இருப்பேன். இந்த ஆண்டு மேதினம், இல்லாமை, அறியாமை எனும் கொடுமை நிரம்பி உள்ள காரணத்தால், சூழ்நிலை பாழாகி, கழுத்தறுப்பவன், கன்னம் வைப்பவன், கைகால் ஒடிப்பவன், பூட்டு உடைப்பவன், கள்ளச் சாராயம் காய்ச்சுவோன், கத்தரிக்கோல் போடுவோன் என்னும் இன்னோரன்ன பிற வழிதவறிய மக்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில், ஒரு கொட்டடியில் இருந்துகொண்டு இருக்கின்றேன். இங்கு நான் பார்க்கிறேன், நடத்திச் செல்பவர்கள் அமையாத காரணத்தாலேயே கெட்டவழி சென்று விட்டவர்களை; மீண்டும் சமூகத்தில் இடம் கிடைக்காது என்று மனம் ஒடிந்துபோய், 'கைதிஜாதி'யில் சேர்ந்து விட்டவர்களை; இங்கு உள்ள ஆயிரத்துக்குமேற்பட்ட கைதிகளில், ஏ.பி.வகுப்புக் கைதிகள் தவிர, மற்றவர்கள் சொந்தத்தில் வீடுவாசல், தொழில் ஏதுமற்ற ஏழ்மை நிலையினர். வயிறாரச் சாப்பிட்ட நாட்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். குடிசையிலே வாழ்ந்தவர்களே பெரும்பகுதியினர்.
சமூகத்திலே ஒரு பிரிவினர் இதுபோல் ஆகாபடி தடுத்திட, சமூக அமைப்பிலேயும் பொருளாதார அமைப்-