246
பார்க்கும்போது, காவலாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது புரிகிறது. அதனால்தான், காவலாளிகள் கடினமான வேலையில் உழலவேண்டி இருக்கிறது. காவலாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான்; அளவுக்கு மீறிய வேலை செய்வதால் ஏற்படும் சலிப்பு உணர்ச்சி எழாமலிருக்கும். 'வாங்க! வாங்க! மணி ஆறு அடிச்சாச்சி' என்று கூப்பிட்டார் ஒரு காவலாளி கீழே இருந்த எங்களை. குரல் கேட்டதும், இயற்கையாக, 'இதற்குள்ளாகவா?' என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால், அந்தக் காவலாளியின் முகத்தைப் பார்த்ததும், எனக்கு உடனே எழுந்து, மாடிக்குச் சென்றுவிட வேண்டும் என்றுதான் தோன்றிற்று. ஏன் என்றால், அவருடைய பேச்சு, அவ்விதம் இருந்தது.
"மூணு ஜென்மம் ஆயிட்டுது, இன்னும் இருப்பது சாராயக்கேஸ் தண்டனை காலம்தான்"—என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டார். புரியவில்லையா?
மூணு ஜென்மம், முப்பது ஆண்டுகள்! ஒரு ஆயுள் தண்டனை, கிட்டதட்ட பத்து ஆண்டுகள்—ஒரு ஜென்மம், அதுபோல மூணு ஜென்மம் அளவுக்கு, அதாவது முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தாகி விட்டதாம். காவலாளி, தன் வேலை நாட்களை, கைதியின் தண்டனை நாட்கள் போன்றவை என்று எண்ணுகிறார், ஏக்கத்துடன் பேசுகிறார். நாலுவாரம் தண்டனை என்பது சாராய வழக்கிலே கிடைப்பது. இந்தக் காவலாளி இன்னும் நாலு வாரம்தான் வேலையில் இருப்பாராம்—பிறகு விலகப்போகிறார். வேலையில் இருக்கவேண்டிய நாட்களை, தண்டனை நாட்கள் என்று கருதுகிறார். காவலாளிகளின் வேலை நேரம்—வேலைமுறை—இவைகளைப் பார்ப்பவர்கள், அந்த வயதானவர் கூறினதை மறுக்க மாட்டார்கள்.
4—5—64
ஏமாற்றம்! எதிர்பார்த்தபடி, மதிக்கும் மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை; காரணமும் தெரியவில்லை. வழக்கமாக உலவும் வதந்திகளின்படி சர்க்காரிடமிருந்து