பக்கம்:கைதி எண் 6342.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247

'உத்திரவு வரவில்லை' என்று தெரிய வருகிறது. உண்மை என்னவென்றால், விடுதலை ஆகப்போகிறார்கள் என்ற செய்திதான், ஆதாரமற்ற வதந்தி.

இன்று, S.S.ராஜேந்திரன் வந்திருந்தார். நான், மதி அன்பழகன் மூவரும் கண்டு பேசினோம். சிறைமேலதிகாரியின் அறையில், அவர் முன்னிலையில், நண்பர்களைக் குறித்துக் கேட்டறிந்து கொண்டோம்.

"அண்ணா! ரவி என்ன சொல்கிறான் என்பதைக் கேளுங்களேன்" என்று பாசத்துடன் ராஜேந்திரன் கூறினார்; ரவி அவர் மகன்.

"அண்ணா! ஜெயில் கதவோட கம்பிகளை எடுத்துட்டு வெளியே வந்துவிடுங்க." என்கிறானே!

சிறை மேலதிகாரியைக் காட்டி, "இவர் யார் பார்த்தாயா? சும்மாவிடுவாரா?" என்றேன்; குழந்தை பயந்தே போனான். இதற்கு முன்பு எப்போதும் என்னைப் பார்த்திராத முற்றிலும் வேறான இடம், அதனால் அச்சம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் மிகக் கலகலப்பாகச் சிரித்துப் பேசுவான். நான், அவனுக்கும் "அண்ணா"; அவனுடைய அப்பாவுக்கும் "அண்ணா"; அப்படி அழைத்தே பழகிவிட்டான்.

பார்க்க வருகிறவர்களும், மிகுந்த ஆவலுடன் ஏதேதோ பேசவேண்டும் என்றுதான் வருகிறார்கள். நாங்களும், வருகிறவர்களிடம் நிறையப் பேசவேண்டும், எதை எதையோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாகத்தான் பார்க்கிறோம். ஆனால், பேசும் இடத்தில் குறைந்தது இரண்டு அதிகாரிகளாவது எதிரே, மிக அருகாமையில் உட்கார்ந்து கொள்ளும்போது, எப்படிப் பேசவரும், எதைப்பேசத்தோன்றும்? பார்த்தோம், நலன் கேட்டறிந்து கொண்டோம், அதுபோதும் என்று சில நிமிடங்களிலேயே தோன்றிவிடுகிறது. அப்படித்தான் இன்று ராஜேந்திரனிடமும், மிகச் சுருக்கமாகவோ பேச்சை முடித்துக் கொள்ள வேண்டி நேரிட்டது. டில்லி போய் வந்த 'சேதி' பற்றி ஒரு விநாடி நாராயணசாமி மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/247&oldid=1592707" இலிருந்து மீள்விக்கப்பட்டது