பக்கம்:கைதி எண் 6342.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

உடல் நிலை பற்றி மற்றோர் விநாடி, இப்படி மூன்று நான்கு விஷயங்கள் பேசி முடித்ததும், மேற்கொண்டு என்ன பேசுவது என்பது இருவருக்கும் புரியவில்லை. பேச விஷயமா 'இல்லை'! கழக விஷயம் பேச ஆரம்பித்தால் நாள் போதாது. ஆனால் ‘அரசியல்'தான் பேசக்கூடாதே!!

இதைக் கூடவா சர்க்கார் கவனிக்கிறார்கள்? என்று நான் ஒரு சிறை அதிகாரியைக் கேட்டேன். சரியாப்போச்சு. உங்களுக்கென்ன தெரியும்? உங்களைப் பார்க்க யாரேனும் கழகத்தார் வந்தார்கள் என்றால், அவர்கள் உங்களைப் பார்த்துவிட்டுப்போன உடனே, துப்பறியும் துறைக்காரர் வருகிறார். 'என்ன பேசினார்கள்?' என்று கேட்கிறார்; "விவரம் விசாரிக்கிறார்" என்று கூறினார். 'கள்ள மார்க்கட்காரனையும் கொள்ளை இலாபம் அடிப்பவனையும் கண்டுபிடித்து அடக்க இந்தத் துப்பறியும் திறமை பயன் படக்கூடாதா? எதையும் ஒளிவு மறைவு இல்லாமல், மக்களுக்கும் சர்க்காருக்கும் அறிவித்துவிட்டுச் செய்யும் எங்கள் கழக சம்பந்தமாகவா இவ்வளவு திறமையையும் வீணாக்க வேண்டும்?' என்று நான் கேட்டேன். "அதெல்லாம் பெரிய விஷயம்!" என்று சொல்லிக்கொண்டே அந்த அதிகாரி சென்று விட்டார். இந்தப் பேச்சை எவனாவது கேட்டுவிட்டு, ஏதாவது கோள்மூட்டி விடப்போகிறான் என்று அவருக்குப் பயம். சுயராஜ்யம் ஏற்பட்ட பிறகு தொடங்கிய இந்தப் 'பயம்'. நாளாகவாக வளர்ந்தபடி இருக்கிறது. அதிலே ஒரு கூறுதான் இங்குள்ள அதிகாரிகளின் போக்கிலே நான் காண்கிறேன். இத்தகைய பயம் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. ஆனால், நடைபெறுவது பெயரளவுக்குத்தானே ஜனநாயகம்!

இன்று நடைபெற்று வரும் போக்குக்கு, காஞ்சீபுரம் கே.டி.எஸ்.மணி ஒரு எடுத்துக்காட்டு கூறினார்.

கே. டி.எஸ் மணி திருவேங்கிடம் இருவரும் காஞ்சி நகராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் கைது ஆகிச் சிறையில் இருந்தனர்—வழக்கு முடிவு பெறவில்லை. இடையில், நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல். இருவருடைய ஓட்டுகளும் கழக வேட்பாளருக்குக் கிடைக்காதபடி தடுத்துவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/248&oldid=1592708" இலிருந்து மீள்விக்கப்பட்டது