பக்கம்:கைதி எண் 6342.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

குற்றம் மெய்ப்பிக்கவிடவில்லை என்பதனால், விடுதலை செய்யப்பட்டார்கள் என்றும் இதழ்கள் மூலம் செய்தி கிடைத்தது.

மதுரையில் முத்து குழுவினருக்கு ஓராண்டு தண்டனை தரப்பட்டது கண்டு, இங்கும் அதுபோல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். நான் சற்று அதிகமாகவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன், ஆகவே ஆறுதிங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஒருவிதமான ஆறுதல் அளித்தது.

தண்டனைதான் ஆறு திங்களே தவிர, அவர்கள் வழக்கு நடைபெற்று முடிய எடுத்துக்கொள்ளப்பட்ட 4 மாதங்களும் சிறையிலே இருந்து வந்தனர்; ஆக மொத்தத்தில் பத்துமாதச் சிறை என்று ஆகிறது.

தோழர் கோவிந்தசாமி சிறையில் இருக்கும்போது, அடுத்தடுத்து அவருடைய அண்ணனும், அக்காவும் காலமாகிவிட்டனர். அதனால் ஏற்பட்ட வேதனையையும் சுமந்து கொண்டு, அவர் சிறையிலே அடைபட்டுக் கிடந்தார்.

தோழர்களைச் சென்னைச் சிறைக்கு எப்போது அழைத்து வருவார்கள் என்று ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தோம். அவர்களுக்கும், சிறை செல்கிறோமே என்ற கலக்கமோ கவலையோ எழுந்திருக்காது; சென்னைச் சிறையில் என்னையும் மற்ற நண்பர்களையும் காணலாம், உடனிருந்து மகிழலாம் என்ற எண்ணம்தான் ஆர்வமாக எழுந்திருந்திருக்கும், என்று எண்ணுகிறேன்.

தமிழகத்தில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு தண்டனைபெறும் கழகத் தோழர்கள் அனைவரையும், ஒரே ஊரில், ஒரே சிறையில் வைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

18—5—64

இரண்டு நாட்களாக கோவிந்தசாமியும் மற்றவர்களும் வருவார்கள், வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோம். ஒருசமயம் அவர்களை வேலூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/275&oldid=1593471" இலிருந்து மீள்விக்கப்பட்டது