பக்கம்:கைதி எண் 6342.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

ஆனால் இதிலே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவிலே உள்ளதாகக் கற்பனையாகக் கூறப்படும் ஏழு ஓட்டு முறையில், ஒருவர் அந்த ஏழு ஓட்டுகளையும் ஒரேநேரத்தில் பொதுத் தேர்தலின் போது, உபயோகப் படுத்துகிறார்—இங்கு மூன்று ஓட்டுகளை வைத்திருப்பவர், மூன்று ஓட்டுகளையும், தனித்தனியாக, மூன்று கட்டங்களில் பயன்படுத்துகிறார்.

இங்கு மூன்று ஓட்டு உள்ளவர், மூன்று வெவ்வேறு தேர்தல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உரிமையும் பெறுகிறார். கதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு ஓட்டு முறையில், ஒரே தேர்தலில் ஏழு ஓட்டுகளை அவைகளைப் பெற்றிருப்பவர் உபயோகித்து, ஒரே ஓட்டுப் பெற்றுள்ள—வாக்காளரைவிட, ஏழு மடங்கு வலிவுபெற்றவர் தான் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

சொல்வதில்லையே தவிர, சொல்ல நினைத்தால், இங்கு ஒரு பட்டதாரி ஆசிரியர், சாதாரண வாக்காளரைப் பார்த்து, "உன்னைப்போல நான் என்று எண்ணிக் கொள்ளாதே; பொது உறுப்பினர் தேர்ந்தெடுக்க மட்டுமே உனக்கு ஓட்டு உண்டு; அந்த ஓட்டு எனக்கும் உண்டு; ஆனால் பட்டதாரிகள் தொகுதியிலேயும், ஆசிரியர்கள் தொகுதியிலேயும் உனக்கு ஓட்டு இல்லை; எனக்கு உண்டு; நான் உன்னைவிட மும்மடங்கு; தெரிந்துகொள் என்று சொல்லலாம்—வேடிக்கையாக. ஆஸ்திரேலியாவிலேயே ஒரே பொதுத் தேர்தலின்போது ஒருவர் மற்றொருவரை விட, இருமடங்கிலிருந்து ஏழு மடங்குவரை வலிவு காட்டக் கூடியவராகிறார்.

தகுதிகள், தனித்திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகள் கொண்டவர்கள் மட்டுமேதான், ஆட்சி அமைப்புக் காரியத்தில் ஈடுபடவேண்டும் என்று கூறுவது, ஜனநாயகம் ஆகாது. ஆனால் ஐனநாயகம் என்பதற்காக தகுதிகள், திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகளுக்குப் பொருளும் பயனும் இல்லாமலே போய்விடவேண்டும் என்று கூறுவதும் சரியாகாது. ஆகவேதான், ஜனநாயக அடிப்படையையும் அழிக்காமல், தனித்தன்மைகளுக்கும் வாய்ப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/284&oldid=1593507" இலிருந்து மீள்விக்கப்பட்டது