பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. பூதப்பாண்டியன் தேவி பண்டையர் பாண்டியர் 'தண்ணுர் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாடு' என்று பாண்டிய காட்டைப் பாராட்டியருளினர் மணிவாசகப் பெருமான். பாண்டிய நின் நாடுடைத்து நல்ல தமிழ்' என்று பாண்டியன் ஒருவனைப் போற் றினர் தமிழ் மூதாட்டியார். இன்பத் தமிழின் பிறப் பிடமாகிய பாண்டிய நாடு மிகவும் பழமை வாய்ந்தது. 'பண்டைய நாடு' என்பதே பாண்டிய நாடு' என மருவியதாக அறிவுடையோர் சிலர் கூறுவர். படைப்புக் காலங் தொட்டு மேம்பட்டு வந்த பழங்குடியினருள் பாண்டியரும் ஒருவராவர். பைந்தமிழ் வளர்த்த பாண்டியர் இப்பாண்டிய மன்னர்களே பசுந்தமிழைப் பேணி வளர்த்த பெற்றியர். பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்(து) இருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை." என்று தமிழணங்கைப் பாராட்டினர் வில்லிபுத்துாரார். பொதிய மலையிலே பிறந்த தமிழ்ச் செல்வி, பாண்டியன் புகழாகிய பாயலிலே கிடந்தாள். அவன் நிறுவிய அருந்தமிழ்ச் சங்கத்தின் தெய்வப் பலகையில் இருந்தாள். வையை ஆற்றின் வெள்ளத்திலிட்ட ஞானசம்பந்தரது ஏட்டில் தவழ்ந்து சென்ருள். இங்ங்னம் தமிழ் பிறந்து வளர்ந்து சிறந்து பெருமை