பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

லும், இருட்டில் ஒரு எழவும் தெரியாது சிறிது வெளிச்சம் போட்டாலும், மூளியும் மூங்கறையுமான சில வர்ணப்பூச்சுகள் தான் மிஞ்சியிருக்கும். அவற்றை ஒட்டி ஆயிரத்தெட்டு அளப்புகள் விடத்தயங்க மாட்டார் புரோகிதர், அவருக்கு 'ஸம்திங்' பெற்றாக வேண்டுமே! அதற்குத்தான்.

இந்த மாதிரியாக கலையின் சமாதிகளாகிவிட்ட கோயில்களை அந்தகார நிலையங்களாக இன்னும் விட்டு வைப்பானேன்.

பழந்தமிழர் பெருமையை கூறுவதை விட இன்றைய மனித சமுதாயத்தின் அறியாமையை, இழி நிலைமையைத் தான் சுட்டிக்காட்டுகிறது கோயில்.

சிந்திக்க வல்லார் கேட்டால் சிரித்துத் துப்பக்கூடிய சிறுமைகள் பக்தியின் பெயரால் வளர்கின்றன கோயில்களில்!


படவுலகில் கடவுளர்கள்

படும் பாட்டை விளக்கிய

கோரநாதன்

மீண்டும் எரிமலை அனல்பொறி

சிதறுகிறார் படவுலகின் மீது !

விரைவில் வெளிவரும்

சினிமாவில்

அப்பாவிகள் !

இது எரிமலைப் பதிப்பக வெளியீடு