பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பாதித்து வந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாட்டுச் சரித்திரமும் சுட்டிக்காட்டும்.

கடவுள் பூஜைக்கு என வந்த புரோகிதவர்க்கம் மனித அறியாமையை அகண்டதாக்கியது. மரணத்தின் பின் மனிதநிலை யாது என்று புரிந்து கொள்ளாதவர்களிடையே, சொர்க்கம் நரகம், எம தண்டனே பாப புண்ணியம் என்றெல்லாம் கதைத்து, தங்களேத் தாங்களே பரலோகத் தபால் பெட்டிகளாக நியமித்துக்கொண்டு பொருளும் பணமும் சுரண்ட ஆரம்பித்தது. சுரண்டி வருகிறது.

மதத்துக்கு மக்களிடமுள்ள அபிமானத்தை அடிப்படையாக்கி, தாங்கள் செல்வாக்குப் பெற்று ராஜீய விஷயங்களில் தலையிட்டு தங்களை ராஜாக்களை ஆட்டிவைக்கும் ராஜாக்களாக்கிக் கொண்டு அந்தபுரச் சுந்தரிகளையும் தங்கள் கைப்பாவைகளாக மாற்றிக் கொட்டமடித்த குருக்கள்கள் எண்ணற்றோர் உண்டு. இப்பொழுதும் இருக்கிறார்கள். இது கிடக்க.

குறிப்பிட்ட சில இடங்களில் தான் தெய்வம் தொழவேண்டும் எனச் சட்டமியற்றியது புரோகித வர்க்கத்தின் சுயகலமே ஆகும். குறிபிட்ட சில இடங்களில் குறித்த ஒரு வகுப்பினரே பூஜை பண்ண உரிமை பெற்றவர்கள் என்று திட்டமிட்டதே இதை வலியுறுத்தும்.

இந்த ஏற்பாட்டின் மூலம் பொருளாதாரச் சுரண்டலுடன் தாங்களே உயர்ந்தவர்கள். தாங்கள் வழங்கி வருவதே தேவபாஷை, பிறர் அந்த பாஷையை கற்கக்கூடாது, வேதங்கள் தங்கள் சமூகத் தனி உரிமை என்று சொல்லி அறியாமையையும் போஷித்து வந்தனர் புரோகிதர்.