பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மக்கட்குலத்தில் சிந்தனை விழிப்பு ஏற்பட, ஏற்பட புரோகிதர்களின் வீண்மாய்மாலவார்த்தைகளின் உண்மைத் தன்மை அம்பலத்துக்கு வரலாயிற்று. ஏமாந்தவர்களைப் பயன்படுத்திக் கொண்டு தாம் ஏற்றம் பெற எண்ணுகிற புரோகிதக் கும்பலின் சுயநலம் சமாதியில் அடக்கப்பட வேண்டும் என்று கர்ஜிக்கும் சிந்தனையாளர்கள் - சீர்திருத்தக்காரர்கள் - சொல்லாலும் செயலாலும் சமுதாயத்திலே விழிப்பேற்படுத்தி வருகிறார்கள்.

கடவுள் என்கிற தத்துவம் ஆதியில் அஞ்சிநடுங்கிய மனிதனின் அறியாமை சிருஷ்டித்த ஒன்று. காலப்போக்கிலே மனித மனோபாவம் அதில் பற்றுக்கொண்டு கடவுள் தத்துவத்திற்கு கற்பனை மெருகு தீட்டிப் பூஜிக்கத் தொடங்கியது. அத்துடன் சுயநலக் கும்பல் தாங்கள் பெருமை அடைவதற்காக குள்ளநரிச் செயல்கள் புரிந்தது. புராணங்கள் என்றும் லீலைகள் என்றும் அளந்தனர். எதற்காக? ஏமாற்றி காசு பறிப்பதற்பாக, லீலாவிநோதக் கடவுளர்களும், அவதாரங்களும் தங்கள் கனவிலே தோன்றிப் பேசும்; தாங்கள் கடவுளரின் பிரதிநிதிகள் என்று பம்மாத்துப் பண்ணி பணம் பிடுங்குவதற்காக. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இன்றையக் கோயில்கள் சம்பந்தமான கட்டுக் கதைகளும், ஸ்தலபுராணங்களும், கடவுளரின் லீலா விநோத எடுகளும் எடுத்துக் கூறும்.

மனிதன் தன்னைப் போலவே கடவுளைப் படைத்துக்கொண்டான், தனக்கு மனைவி, மக்கள் வீடு, நகை முதலியவற்றில் ஆசை இருப்பது போலவே கடவுளுக்கும் இருக்கும் என்று இறைவனுக்கு பெண்டாட்டி பிள்ளைகள் ஏற்படுத்தினான். பெரிய பெரிய மாளிகைகள் கட்டிக்கொடுத்தான். பாலாபிஷேகமும் பிறவும்