பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

செய்கிறான், ஆடம்பர நகைகளும் பட்டு பீதாம்பரங்களும் அணிவிக்கிறான்.

கடவுளர்கள் தாசி வீட்டுக்குப் போவதாகவும், திரும்பி வந்ததும் அம்பிகை கோபித்துக் கொண்டு கதவடைப்பதாகவும், அவர் கெஞ்சுவதாகவும் திருவிழா நடைபெறுகிறது. வருஷந்தோறும் திருக்கல்யானம்! திருவிழாக்கள்! இவை எல்லாம் பக்தியின் விளைவா? கேலிக் கூத்தா? எள்ளி நகையாடப்பட வேண்டிய பித்தலாட்டமா? சிந்தித்துப் பாருங்கள்.

இந்த விளையாட்டு எவ்வளவு தூரம் வளர்கிறது என்பது கோயிலில் நடைபெறும் தினசரி நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்கும். வேளைதோறும் பூஜை நடத்துவது போல, சாமிக்கு இரவில் காம பூஜையும் தேவை போலும்! அதற்காக பள்ளியறை-சம்பிரதாயமான அலங்கார, ஆகாராதிகளுடன் கொலு நிர்மாணிக்கப்படுகிறது. சாமியையும் அம்மனையும் படுக்கப் போட்டு, கதவை இழுத்துப் பூட்டிவிடுவதுடன் அர்த்த ஜாம பூஜை முடிவடைகிறது.

இது தான் பக்தியா ?

வைஷ்ணவ ஆலயங்களில் ஓர் சம்பிரதாயம் உண்டென அறிகிறேன். இரவில் பள்ளியறையில் படுத்த கடவுள் தம்பதிகள் திருப்பள்ளி எழுந்ததும் பூஜை நடைபெறும்! அப்போது, பெருமாளுக்குப் பின்புறம் ஒருவகை 'பிரசாதம்' வைத்து பூஜை முடித்ததும் வினியோகிக்கப்படும். இதற்குப் பொருள் 'திருக்குண்டிப் பிரசாரம்' என்று வைஷ்ணவ அன்பர் ஒருவர் விளக்கினார்.

சல்லித்தனமான இந்தக் கற்பனை தினசரி சம்பிரதாயமாக உலவும் இடங்களிலே தெய்வீக நினைவு