பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இதுதான் பக்தியா?

கடவுள் தத்துவம் மனித உணர்ச்சிகளையும் ஆசைகளையும் மன அரிப்புகளையும் அடக்க - வாயாரப் புலம்ப வகைசெய்யும் போதை ஈன்றேன்.

இது விளைக்கப்படவேண்டிய விஷயம். பக்தி, பக்தி என்கிறார்கள். ஆனால் பக்த குழாங்களின் சொல்லும் செயலும் அதை நிரூபிப்பதாயில்லை. கோயில்களில் கும்பல் கூடுவது பக்தி பண்ணுவதற்காக மட்டுமல்ல

பத்தியால், அடக்க இயலாத் தெய்வ நினைப்பால் கோயிலுக்கு வருபவர்கள் ஐந்து சத விகிதம் பேர்கள் கூட இராது. அதவும் கிழடு கட்டைகளே ஆகும். இன்னும் பலர் கோயிலுக்குப் போவதை ஏதோ ஒரு கடனுக் கருதிச் செய்பவர்கள். வேளா வேளைக்குச் சாப்பிடுவது போல இரவானதும் கோயிலுக்குப் போய் சுற்றிவிட்டு வரவேண்டும் என்ற பழக்கம், இவர்ளிடையே உறைந்துள்ளது. இவர்கள் மனதில் பக்திக்குப் பதிலாக குடும்பக் கவலைகளும், உலகாயத எண்ணங்கள், ஆசைகள், கனவுகளே மண்டிக் கிடக்கும், இந்நிலையில் பக்திக்கு இடமேது?

வேறு சிலர் 'சும்மா' நேரம் போகவில்லையே என கோயிலுக்குபோவார்கள். கோயிலுக்குப் போனால் *அடுத்த தெரு அவாளையும், இந்த வீட்டு இவாளையும்' பார்க்கலாம் வம்பளக்கலாம் எனப் போவோரும் உண்டு. அங்கு வரும் அம்பிகைகளின் 'தரிசனார்த்தம்' போவோர் அநேகர். கோவிலின் இருட்டிலே காதல் பண்ணும் வினைவுடன் போகிறவர்கள் உண்டு. இப்படி எவ்வளவோ ரகங்கள் !

வைஷ்ணவர் கோயில்களில் திருவிழா காலத்தில் சப்பரங்களின் முன்னாலும், சாதாரண நாட்களில்