பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வளின் அன்பனே, அப்பனே என வியக்கிறார்கள். இது தான் பக்தியா?

இந்தப் பாடல்களைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் காம நினைவுதான் எழுகிறது.

இத்தகைய வர்ணனை விஷயத்திலே அருணகிரி நாதர் அசகாய சூரர் / கட்டிலிலேறி கன்னி மன மந்து அரசிலை வருடும் அற்புதம் வரை அபாரமாகப் பாடித் தள்ளிவிட்டார், இதை பெண்கள் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். இப்பாடல்களை விரிவுரை செய்து சொல்மாரி பொழிய ஒரு பிரசங்கி.

பிரசங்கத்துக்கு நூறுரூபாய் பெற்றுக்கொண்டு கூட்டம் கூட்டுவார். ஒருவரிக்கே ஒன்பது மணிநேர வியாக்யானம் சுவையாகச் செய்வார். தங்கம் டாலடிக்கும் ருத்திராக்ஷ மாலை புரள பல்லெல்லாம் பளபளக்க அவர் கும்பலில் கூடியுள்ள பெண்கள் பக்கமே பார்த்துப் பார்த்துச் சிரித்துச் சிரித்து சொல்மாரி பொழிவது கோயில்களில் நடைபெறும் திருப்பணி, தமிழ்ப் பணியாம் ஐயா இது! இது தான் பக்தியா?

திருவிழாக் கும்பல்களில் செக்ஸ் பேதங்கள் எங்கோ பறந்துவிடும். பெண்களே துணிந்து ஆண்கள் மேல் உரசிக்கொண்டு குதித்து ஓடுவது சர்வ சாதாரணம். இந்தப் பேரின்பம் பெறுவதற்காகவே சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு கணக்கே கிடையாது! இந்த வேட்டையும், கண்வெட்டுகளும் வெற்றிகரமாக வளர்ந்துவிட, இரவில் கோயில் பிரகாரங்கள் இருளடைந்த மூலைகள், ஒதுக்கிவிட்ட சில்லறைச் சாமிகள் குடியிருக்கும் இருட்டறைகள் முதலியவை இன்பம் நுகரும் வேட்டைக்காரர்களின்