பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாவலிப்பு

________________

'ஆலயப்பிரவேசம் வேண்டும்" கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடுங்கள்' என்று சொல்லப் படுகிற இந்தக் காலத்திலே, "கோயில்களை மூடுங்கள் என்று நாவலிக்கிறோம்.

அறியாமை அந்தகாரத்துக்கு, புரோகிதப் புல்லுருவித்தனத்துக்கும், சுரண்டும் செயலுக்கும் சமாதிகட்டுவதற்காகத்தான்,கோயில்களுக்கே 'கோவிந்தோ கோவிந்து,கூவி.அரோகராப் போட்டு இழுத்து மூடும்படி எக்காளமிடுகிறோம்.

இன்றையக் கோயில்களிலே கடவுள் இல்லை. தெய்வீகம் நிலவவில்லை, சிந்தனைப் பொன்னொளி இல்லை, மனிதரை மனிதராய் வாழவைக்கும் மாண்பு இல்லை என்று சுட்டிக் காட்டுகிறோம்.

கவிஞர் பாரதிதாசருடன் சேர்ந்து யாமும் கேட்கிரோம்.

சிந்தனாசக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி ஊறும் பதத்தறிவை இல்லா தொழித்து விட்டுச் சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பை குன்றவைத்தும் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக் கற்கள் கடவுள்களாய் காணப்படும் அங்கே இந்த நிலையில் சுதந்திரப் போரெங்கே? கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே