பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமைத்தனம் ஒழிக்கப்படவேண்டுமானால், அறிவுணர்ச்சி பெறவேண்டும் மக்கள். அதற்கு ஆவன செய்யவே முதலில் கோயில்களை மூடுங்கள்!” என்றோம், மனிதரை அடிமையாக்கி, பொருளாதாரம்,அறிவுத்துறை, வாழ்வு அந்தஸ்து முதலிய சகல வழியினும் சமூகத்தின் பெரும்பாலோரை 'இல்லாதவர்களாக்கி, ஏமாந்த காலத்தில் நரியுயிர்ச் சிறு தாதர்கள் ஏற்றம் கொள்ளும் துரோகச் செயலைக் குழி வெட்டி புதைப்பதற்காகவே கோயில்களை மூடச் சொல்கிறோம்.

கோயில்களை பாழடைய விட்டு, வெள்ளெருக்கும் வௌவாலும் செழிக்கும் இடங்களாக்குங்கள் என்று சொல்லவில்லை,மனித சமுதாய முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை புனர் அமைப்புக்கும் வழி காட்டும் யோசனையும் திட்டங்ளையும் செயலாட்ரத்தான் சொல்கிறோம்.


பொதுசன அரசாங்கம் இவற்றைச் செய்யலாம், செய்ய முடியும் மனமிருந்தால், அதனாலேயே இந்தச் சந்தர்ப்பத்திலே இந்நூலை வெளியிடுகிறோம்,கோயிலைச் சேர்ந்த நிலங்களை அரசாங்க மேற்பார்வையில் எடுத்து உணவுப் பொருள்களை அதிகம் பயிரிடும் திட்டத்தில் ஈடுபடப் போகிறது என்று பத்திரிகையில் வந்த செய்தி மகிழ்வளிக்கிறது. அதேபோல் கோயில் வருமானங்களும் பெட்டிகளில் அடைபட்டுக்கிடக்கும் நகைகளும், கல்வி அபிவிருத்ததிக்கும், தொழில் அபிவிருத்திக்கும்,மனித குல வளர்ச்சிக்கும்,பயன்பட வேன்டும் என்ற ஆசையாலேயே இந்நூலை வெளியிடுகிறோம்.

இவையெல்லாம் தமிழர் ஆட்சியில்தன் நிறைவேற முடியும் என்று காலம் நிரூபிக்குமானால்,தமி