பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

11



மணிமேகலை காதை 30 வரி 258 சுருதி சிந்தனா பாவனா தரிசனா

திருக்கலம்பகம் செய்.84

போற்றுமிது வென்கொல் பொய்ந்நூல் களைப்புலவீர் சாற்று மனந்த சதுட்டயத்தா - னேற்றுந் துளகப் படாத சுருதியா லல்லா லளக்கப் படுமோ வறம்.

பாபஞ் செய்யாம லிருங்கோளென்பது ஓர்வகையும், நன்மைக் கடைபிடியுங்கோளென்பது ஒருவகையும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பது ஒருவகையுமாக, மூன்றுவகை வாக்கியங்களானது கொண்டு, மூன்று பேதவாக்கியங்க ளென்றும், திரிவேதவாக்கியங்களென்றும் வழங்கலாயிற்று.

இவ்வாக்கியங்களை யொருவர் போதிக்கவும், மற்றவர் கேட்டுக்கொள்ளும் சுருதி வாக்கியங்களாயிருந்தபடியால், அவைகள் மறதிக்கு வந்துவிடுமென்றெண்ணிய அவலோகித ராம் புத்தபிரான், வடமொழி யென வழங்கும் சகடபாஷையை விரிவாக இயற்றி பாணினியாருக்கும், தென் மொழியென வழங்கும் திராவிட பாஷையை விரிவாக இயற்றி அகஸ்தியர் வசமுமளித்து, சுருதி வாக்கியங்களென்னும் திரிபேத வாக்கியங் களையும் அதன் பிரிவுகளாம், அதனதன் அந்தரார்த்த விரிவு களையும் தாம் வரிந்துக்கொடுத்த வரிவடிவாம் அட்சரங்களிற் பதிவுபடப் பரவச் செய்தார்.

சிவஞான யோகீஸ்வரர் ஞானத்திரட்டு வீரசோழியம் பதிப்புரை பக்கம்.3

திடமுடய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய்த
வடமொழியை பாணினுக்கு வகுத்தருளியதற்கிணையாய்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த
குடமுநிக்கு வற்புறுத்தார் கொல்லாற்று பாகர்.

வீரசோழியம் கிரியாதபடலம் செய்.13

மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந் தமிழ் மரபும்
முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமு மோங்குவினைப்
பதத்திற் சிதைவும் பறிந்தே முடிக்கப் பன்னூறாயிரம்
விதத்திற் பொலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே.