இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிரல் (காட்டு மல்லிகை)
ஜாஸ்மினம் அங்கஸ்டிபோலியம்
(Jasminum angustifolium,vahl.)
அதிரல் கொடி முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தது. இது மல்லிகை இனத்துள் அடங்கும்.
சங்க இலக்கியப் பெயர் | : | அதிரல் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | குளவி, மௌவல்., மல்லிகை, மல்லிகா. |
பிற்கால இலக்கியப் பெயர் | : | மல்லிகை, புனலிப்பூ |
உலக வழக்குப் பெயர் | : | காட்டு மல்லிகை, மோசி மல்விகை |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் அங்கஸ்டிபோலியம் (Jasminum angustifolium,vahl.) |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் (Jasmin) |
அதிரல் இலக்கியம்
சங்க இலக்கியங்கள் அதிரல் கொடியை மௌவல், குளவி, மல்லிகை முதலியவற்றினின்றும் வேறுபடுத்தியே கூறுகின்றன.
“செருந்தி அதிரல்”
-குறிஞ். 75
“அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்”
-முல்லைப். 51-52
என்ற இவ்வடிகளில் வரும் அதிரல் என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் புனலிப்பூ என்று உரை கூறியுள்ளார். எனினும்,
73-30