பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூறுகிறார்கள்:

சிங்காரவேலர்: நான் வயோதிகனானாலும் வைதீக புரியிலே ஒரு சிற்றரசன்.அதை பயன்படுத்திக்கொண்டான் வாஞ்சிநாத சாஸ்திரி.என் கண்மனி சந்திராவை ஒரு வயோதிக ஜமீன்தாரருக்கு திருமணம் நடத்திவைத்து அதன் மூலம் தனது பிழைப்புக்கு அஸ்திவாரம் தேட ஆரம்பித்தான். நான் மறுத்தேன். பார்ப்பனியம் படமெடுத்துடியது. நான் பஞ்சையாக்கப்பட்டேன். வாஞ்சிநாத சாஸ்திரி வெற்றிபெற்றான் சூது சூழ்ச்சியால் பணக்காரனானான் என்மகள் நல்லூர் ஜமீன் தாரணியாக்கப்பட்டு மறுமாதமே விதவையாக்கப்பட்டாள். இந்த நிலையிலும் வைதீகபுரியில் இளவரசன் பட்டத்தை இழக்கவில்லை நான்! மாயேந்திரன்! ஆம்! ஊர் மக்களால் மாயேந்திரன் வள்ளல்—மக்கள் நலம் நாடுபவர் என்றெல்லாம் போற்றப்பட்டார் அவர் என்னால் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்டு ஊரை விட்டோடிய துரைராஜ் என்பது எனக்குத் தெரியாது. மாயேந்திரன் அழைத்தார் என்றவுடன் காணச்சென்றேன். நான் சென்ற சிறிது நேரத்தில் வாஞ்சிநாதன் வருவது தெரிந்து நான் மறைவிலிருந்தேன். மாயேந்திரன் வாஞ்சிநாத சாஸ்திரியோடு உரையாடினார்— அதன் முடிவும் சாஸ்திரியை நானே கொலை செய்தேன். அந்த கொலையிலிருந்து என்னை தப்புவித்தார் மாயேந்திரன். என் மகளுக்கும் அவள் காதலன் சாம்பசிவத்திற்கும் திருமணம் முடித்துவைத்தார் ஆனால்,மாயேந்திரன்?

சாம்பசிவம்: துரைராஜ் ஆரம்பித்த புத்துலக கழகத்தில் நான் கோதண்டம் — தங்கவேல் — பார்ப்பண வரதன் இப்படி பலர் பணியாற்றினோம்.என் தந்தைக்கு திதி கொடுக்க வற்புறுத்தினான் சாஸ்திரி! மறுத்தேன். மிரட்டினான் —