பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

 ஏலக்காய்-கபம், உஷ்ண பேதி, பயித்தியம் இவைகளைக் குணப்படுத்தும்; வாய்வைத் தணிக்கும் இருமலுக்கு நல்லது, பித்த சாந்தியாம்.

ஓமம்-இருமல், வயிற்றுப்பசம், ஆசனக் கடுப்பு, சீத பேதி, சுவாசகாசம், தந்தரோகம், இவைகளுக்கு நல்லது, மூலவியாதியை குணப்படுத்தும் - பசியுண்டாக்கி, உஷ்ணகாரி, ஓமத்திராவகம் (Omum Water) பேதி, வயிற்று நோய், மந்தம் இவைகளுக்கு நல்லது.

கக்கரிக்காய் - குளிர்ச்சி பதார்த்தம் - பித்ததோஷம், மூலச்சூடு, கரப்பான் இவைகளை நீக்கும்-கோழையை அதிகப்படுத்தும் - நீரைப் பெருக்கும், மிளகுசேர்த்து பச்சையாகச் சாப்பிடலாம் - பச்சடி செய்து உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கசகசா-சீதபேதி, மலபேதி, திளவு இவைகளைத் தணிக்கும், நித்திரையை உண்டுபண்ணும், சுக்கிலவிர்த்தியாம், மலத்தைக் கட்டும் சீதபேதிக்கு கசகசா லேகியம் புசித்தால் நிற்கும்.

கஞ்சா - மிகவும் கெட்ட பதார்த்தம் - உபயோகிக்கலாகாது.

கடலைப் பருப்பு-அபத்திய பதார்த்தம் - வாய்வை உண்டாக்கும், நல்ல மருந்தை முறிக்கும்-வயிற்றுப்பசம், குடல் நோய், மூலவாயு இவைகளை அதிகரிக்கும் - நீரைப்பெருக்கும் - மலத்தை இளகச் செய்யும் ; மிதமாய் உபயோகித்தல் நலம் இதில் (ஏ) உயிர் சத்து கொஞ்ச முண்டு (பி) உயிர் சத்து அதிகம் உண்டு.

கடற்பாலை-இதன் இலையை அடிப்புறம் வைத்துக கட்டினால் கட்டிகள் பழுத்து உடையும், மேற்புறம் வைத்துக் கட்டினால் கட்டி கரையும்.

கடார நாரத்தை - பசித்தூண்டி உணவை செரிக்கச் செய்யும்; குளிர்ச்சி பதார்த்தம் - பித்த சாந்தி, நல்ல பதார்த்தம்; ஊறுகாய்க்கு நல்லது.