52
தவத்திரு அடிகளார்
422. “நாம் எப்படியும் வாழலாம் என்ற மனப் போக்கு விலங்குப் போக்கு. இப்படித்தான் வாழ வேண்டும் என்று விரும்புவது மனிதப்போக்கு.”
423. “நாள்தோறும் கழிப்பன கழிக்காது போனால் நோய். நாள்தோறும் மறக்கத்தக்கன மறக்கா விடில் சோர்வு தோன்றும்; பகை வளரும்.”
424. “சர்வ வல்லமைவாய்ந்த மேலாண்மையின் துணை இருந்தால்தான் சமுதாயத்தை திருத்த இயலும்.”
425. “புதிய சமுதாய அமைப்புக்கு சர்வாதிகாரம் தவிர்க்க இயலாதது”
426. “மேடு பள்ளங்களே இருக்கும், ஆனால் பள்ளம் மேட்டால் போஷிக்கப் பெறும். இது முதலாளித்துவ சமுதாய அமைப்பு. மேடு பள்ளங்களே உருவாகாது காப்பது சோஷலிச முறை.”
427. “அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகும் இந்தியா மாற்றமடையவில்லை. ஏன்? இந்தியாவின் பழையப்போக்குகளே காரணம்.”
428. “முரடனைத் திருத்திவிடலாம். பயந்தாங் கொள்ளியை-கோழையைத் திருத்தவும் முடியாது; உபயோகப்படுத்தவும் இயலாது.”
429. “முறைகளே, எளிய வழிகள். உழைப்பைச் சிக்கனப்படுத்துபவை. ஆனால், விரும்புவாரைத்தான் காணோம்.”
430. “விதிமுறைகளை முறையாகக் கடை பிடித்துக் கடமைகளைத் தவறாமல் செய்தால் வேலைகள் எளிதாக-ஆனால் நிறைவாக முடியும். பயன்