பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சிலப்பதிகாரம்

ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின் இலங்குகதிர் வடுஉம் நலங்கெழு மணிகளும், காற்றினும், மண்ணினும், கல்லினும், நீரினும், தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்: சந்திர குருவே, அங்கா ரகண், என 195 வந்த நீர்மைய வட்டத் தொகுதியும், கருப்பத் துளையவும், கல்லிடை முடங்கலும், திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும், வகைதெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப் பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும். 200

நகை வீதி சாத ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூ நதம்என ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்களுர் ஒழித்து, ஆங்கு இலங்குகொடி எடுக்கும் நலங்கிளர் வீதியும்

துணிக்கடை

நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும் பாவகை தெரியாப் பலநூறு அடுக்கத்து, நறுமடி செறிந்த அறுவை வீதியும்.

கூல வீதி நிறைகோல் துலாத்தர், பறைக்கட் பராரையர் அம்பண அளவையர், எங்கணும் திரிதரக் காலம் அன்றியும் கருங்கறி மூடையொடு 210 கூலம் குவித்த கூல வீதியும்

மதிற்புறம் திரும்புதல்

பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும், சந்தியும், சதுக்கமும், ஆவண விதியும், மண்றமும், கவலையும், மறுகும்.திரிந்து விசும்புஅகடு திருகிய வெங்கதிர் நுழையாப் 215 பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல், காவலன் பேரூர் கண்டு மகிழ்வு எய்திக் கோவலன் பெயர்ந்தனன், கொடிமதில் புறத்து-எண்.