பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 . சிலப்பதிகாரம்

தாம் இண்புறுஉம் தகைமொழி கேட்டு, ஆங்கு "இடைஇருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடைகலப்பட்ட எம்கோன் முன்நாள் புண்ணிய தானம் புரிந்தோண் ஆகலின், 30 நண்ணுவழி இன்றி, நாள்சில நீந்த, "இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேண் ; வந்தேன்,அஞ்சல், மணிமேகலையாண்; உன்பெருந் தானத்து உறுதி ஒழியாது; துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிக. என, 35 "விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த எங்குல தெய்வப் பெயர்சங்கு இடுக" என அணிமே கலையார் ஆயிரங் கணிகையர், "மணிமேகலை" என வாழ்த்திய ஞான்று. மங்கல மடந்தை மாதவி தன்னொடு 40 செம்பொண் மாரி செங்கையிற் பொழிய

- கருணை மறவன் ஞான நன்னெறி நல்வரம்பு ஆயோன் தானம் கொள்ளுந் தகைமையின் வருவோண், தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி, வளைந்த யாக்கை மறையோன் தன்னைப் 45 பாகுகழிந்து யாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள்ள ஒய்எனத் தெழித்து ஆங்கு, உயர்பிறப் பாளனைக் கையகத்து ஒழித்து, அதன் கையகம் புக்குப் பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி, 50 மைஇருங் குண்றின் விஞ்சையண் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து, பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணை மறவ!