பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சிலப்பதிகாரம்

நன்னெடும் பூதம் நல்கா தாகி, "நரகண் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு. பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை 85 ஒழிக நின் கருத்து" என,உயிர்முன் புடைப்ப, அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து, அவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்துப்; பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்!- 90

உம்மைப் பயன் எனல் இம்மைச் செய்தன யானறி நல்வினை; உம்மைப் பயன்கொல், ஒருதனி உழந்து, இத் 'திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது.

விருத்தகோ பால! நீ" என வினவக்

கோவலன் கனவு கோவலன் கூறும் ஓர் குறுமகன் தன்னால் 95 காவல் வேந்தண் கடிநகர் தண்ணில், நாறுஜங் கூந்தல் நடுங்குதுயர் எய்த கூறைகோள் பட்டுக் கோட்டுமா ஊரவும், அணித்தகு புரிகுழல் ஆய் இழை தண்னொடும் பிணிப்பு:அறுத் தோர் தம் பெற்றி எய்தவும் 100 மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து, காமக் கடவுள் கையற்று ஏங்க, அணிதிகழ் போதி அறவோன்தண்முண், மணிமே கலையை மாதவி அளிப்பவும், நனவுபோல நள்ளிருள் யாமத்துக் 105 கனவு கண்டேண் கடிதீங்கு உறும் என

நகர் புகுக எனல்

அறத்துஉறை மாக்கட்கு அல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின், அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின் உரையிற் கொள்வர் இங்கு ஒழிகநின் இருப்பு 110